சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்திருக்கும் முதல், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கல்லறை ‘மெட்ராஸ் போர் கல்லறை’, கவனிப்பாரற்று இருப்பதால் மழை நீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் உலக அளவிலும் கவனிக்கப்படும் ஒரு நினைவுச்சின்னமாக் திகழ்கிறது மெட்ராஸ் போர் வீரர்களின் கல்லறை. உலகப்போரின் போது உயிர் இழந்த காமன்வெல்த் நாடுகளை (இந்தியா உட்பட) சேர்ந்த வீரர்களின் நினைவு கல்லறை இம்பீரியல் போர் கல்லறை கமிஷனால் நிறுவப்பட்டது.
பின் நாட்களில், இம்பீரியல் போர் கல்லறை கமிஷன், காமன்வெல்த் போர் கல்லறை கமிஷன் என பெயர்மாற்றப்பட்டது. 2.75 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள நினைவுச் சின்னத்தை பராமரிக்கும் பொறுப்பை காமன்வெல்த் போர் கல்லறை கமிஷனிடம் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்படைத்தது.
காமன்வெல்த் போர் கல்லறை கமிஷனின் தற்போதைய மேலாளர் என்.ராஜராஜன் கூறியபோது:
“தாழ்வான பகுதியில் நினைவுக் கல்லறை அமைந்துள்ளதால், மழை பெய்யும் போது இங்கு தண்ணீர் தேங்கவதுண்டு. மழைநீர் சூழும்போது, நினைவுக் கல்லறைக்குள் சுற்றுள்ளாப் பயணிகள் இதர மக்கள் என யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், தண்ணீரை வெளியேற்றவும் அதிகாரிகள் எவ்வித உதவியும் செய்வதில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராஸ் போர் கல்லறையின் பின்புறம் அமைந்திருக்கிறது முதலாம் உலகப்போர் வீரர்களின் நினைவுச் சின்னம். இதில், முதலாம் உலகப்போரில் இறந்த 1039 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப்போரில் இறந்த 856 வீரர்களின் கல்லறையையும் இங்கு நாம் காணலாம்.
வரலாற்று சிறப்புமிக்க தாய்நாட்டுக்காக போராடி உயிர்நீத்த வீரர்களின் கல்லறை கவனிப்பரற்று மழைநீர் தேங்கி குளம் போல் தேங்கி கிடப்பது, அவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்பதை காட்டுவதாக உள்ளது என்று ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் ஒருவர் வருத்தமுடன் பகிர்ந்துக்கொண்டார்.
– தமிழில் ஹாஸ்மிகா
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago