சேலம்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டபோது, அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அதன்பிறகு, மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து, டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு வெறும் 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
எனினும், மேட்டூர் அணையில் நீர் இருப்பைக் கொண்டு, டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து நீர் வழங்கமுடியாத சூழல் உருவானதால், தமிழகத்துக்கு உரிய நீரை, கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த சூழலில், கர்நாடக அணைகளில் இருந்து சில தினங்களாக காவிரியில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,938 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று விநாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரித்தது. நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று முன்தினம்இரவு முதல் விநாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து, 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, அணையின் நீர் மட்டம் 53.50 அடியில் இருந்து, நேற்று 54.40 அடியாக சற்று உயர்ந்தது. அணையின் நீர் இருப்பும் 20.08 டிஎம்சி-யில் இருந்து, 20.69 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது. இதனிடையே, அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு, தற்போது வரை நீர்திறக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 17-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. மேலும், 18-ம் தேதி காலையில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற நிலைக்கு நீர்வரத்து உயர்ந்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து மேலும் அதிகரித்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago