ஒக்கி புயலால் மாயமான மீனவர்கள் எண்ணிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இரு வேறு தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார் டிடிவி தினகரன்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''நாகர்கோவில் - கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் மீனவர்கள் மாயமான விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எண்ணிக்கையில் இரு வேறுவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கின்றனர். பதவியில் இருக்கும்வரை இருப்பதை அனுபவிக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
அத்துடன் மக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு அரசுப் பணத்தில் விழாக்களையும், கட் -அவுட்களையும் வைக்கின்றனர்.
அமைச்சர்கள் பொய் சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள்கூட செல்லவில்லை என அப்பகுதி கிராம மக்களே குற்றம் சாட்டுகின்றனர்'' என்று தெரிவித்தார் தினகரன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago