ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் - அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை குடும்பத்துடன் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது, ஆளுநர், ‘‘எனக்கு அதிகாரம் இருந்தால், கண்டிப்பாக நீட்விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதற்கிடையே, நீட் தேர்வு தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவன் மற்றும் அவரது தந்தை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர்

நீட் விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை ஆளுநர் கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,சுதந்திர தினத்தில் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், நீட் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநரைகண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிசார்பில் தமிழகம் முழுவதும்நாளை (ஆக.20) உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி, மகள் உள்ளிட்டோருடன் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் 3 நாட்கள் தங்கியிருக்கும் அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்புகிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE