பதிவுத்துறை ஊழியர்களின் சொத்து விவரம்: நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக நடந்தபோது, பத்திரப் பதிவுத்துறை தலைவரின் சார்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்து, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஒப்புதலோடு மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக 11 குழுக்கள் நியமிக்கப்பட்டு, பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும் வகையில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துறையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் ஆதார் எண், வருமான வரிநிரந்தர கணக்கு எண் பெற்று சொத்து விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதி வுத் துறையில் நேர்மையான நடைமுறையைக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கையை பாராட்டிய நீதிபதி, பத்திர பதிவுத்துறை, மக்களின் நம்பிக்கை பெறும் நாளை எதிர்நோக்கி பயணிக்க இத்தகைய நடவடிக்கைகள் பயன்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்