வேலைக்கு கரூர் சென்ற கணவரை 5 மாதங்களாக காணவில்லை - 2 குழந்தைகளுடன் பணகுடி பெண் பரிதவிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கரூர் மாவட்டத்தில் தச்சு வேலைக்கு சென்ற கணவரை காணாமல் 2 குழந்தைகளுடன் பணகுடி பெண் பரிதவித்து வருகிறார். இவரது புகார் மீது அதிகாரிகளும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பணகுடி முத்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், தச்சுத் தொழிலாளி. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கரூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் தச்சு பணிக்காக நண்பர் வினோத் என்பவருடன் சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்து இருவரும் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் 13-ம் தேதி பணியை முடித்து விட்டு திருநெல்வேலிக்கு வருவதாக மனைவியிடம் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாளில் அவர் வீட்டுக்கு வந்துசேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுக செல்வி கணவரை தேடும் பணியில் ஈடுபட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் தகவல் சொல்லியதை அடுத்து அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆறுமுகத்தின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடன் சென்ற வினோத் மார்ச் 13-ம் தேதியே அவரது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து கரூருக்கு சென்று ஆறுமுகம் பணிபுரிந்த இடத்தில் விசாரித்தபோதும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் கரூர் காவல் நிலையத் தில் தனது கணவர் ஆறுமுகத்தை கண்டுபிடித்து தரக்கோரி ஆறுமுகசெல்வி புகார் அளித்தார். இதுபோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் நேரில் சென்று மனு அளித்தார். ஆனால் கடந்த 5 மாதங்களாக ஆறுமுகம் குறித்த எவ்வித தகவலும் தெரியவரவில்லை.

இதனால் தனது 2 குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்துவதற்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள ஆறுமுகச்செல்வி கூறும்போது, ‘‘கடந்த 5 மாதமாக கணவரை தேடி வருகிறேன். எனது கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்து, கணவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்