சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி ஆகியோர், சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் மீது சாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திராசெல்வி ஆகியோர்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வரும் 21-ம்தேதி விசிக சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வரும் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago