சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தேசியக் கொடியேற்றி வைத்து, சிஐஎஸ்எப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு நீதி சோழன் சிலை அருகில் 77-வதுசுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சிஐஎஸ்எப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

சான்றிதழ் வழங்கினார்: பின்னர் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து சிஐஎஸ்எப் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் பலர் வேட்டி, சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்,ரகுபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\

பார் கவுன்சிலில்... முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதில் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்