கிருஷ்ணகிரி | மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த வடமாநில தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் சுந்தர்வால் பார்சேகிரி காலா பகுதியை சேர்ந்தவர் அமித்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு சென்றார். பின்னர் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சிக்கு சென்ற அவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி அவர், 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அவரது செல்போனும் உடைந்தது. கோயிலுக்கு சென்ற அமித்குமார், நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது நண்பர்கள் கோயில் மற்றும் மலையின் மீது சென்று தேடினர். விடிய, விடிய மலையின் மீது தேடிய போது, செவ்வாய்க்கிழமை அதிகாலை மலையின் கீழே உள்ள பள்ளத்தில் அவர் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்,அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வீரர்கள் சற்குணம், ராஜி, இளவரசன், மன்சூர் அகமத், அன்பு, நவீன்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து மீட்பு பணியை தொடங்கினர். சுமார் 3.30 மணி நேரம் போராடி காலை 6.30 மணி அளவில் மலையின் 30 அடி ஆழத்தில் செங்குத்தான பகுதியில் விழுந்து கிடந்த அமித்குமாரை உயிருடன் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ட்ரக்சரில் அவரை கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்