அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும், வேற்றுமைகளை மதிக்கும் பண்பும், அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும், வேற்றுமைகளை மதிக்கும் பண்பும், அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி இருந்தார். அவரது உரையில் தேசியம் குறித்து பேசி இருந்தார். | > விரிவாக வாசிக்க: சுதந்திர தின உரை | மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் கொண்டவர்கள் நாம்: முதல்வர் ஸ்டாலின்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE