கரூர்: கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பில் பங்கேற்க காத்திருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென மயக்கமடைந்தார்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் இன்று (ஆக. 15ம் தேதி) 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆட்சியர் த.பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தர வதனம் ஆகியோர் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனர்.
மூவர்ண பலூன்களை பறக்கவிடும் நிகழ்வின் போது சிறுவன் ஒருவரை அழைத்த மூவர்ண பலூன்களை ஆட்சியர் த.பிரபுசங்கர் பறக்க விடக் கூறி சிறுவன் மற்றும் எஸ்.பி. சுந்தர வதனத்துடன் சேர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி, அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
34 பேருக்கு ரூ.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ப.கந்தராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காவல்துறை அணிவகுப்பில் பங்கேற்க காத்திருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென மயக்கமடைந்தார். அருகில் இருந்த காவலர்கள் அவரை தூக்கி சென்று நாற்காலியில் அமரவைத்து ஆசுவாசுப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago