புதுடெல்லி: தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 113 பக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கம் கொண்ட விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறுவை விவசாயம் பாதிப்பு: அதில், காவிரியில் இருந்துஉரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாமல் தாமதிக்கப்படுவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆக.11 அன்று காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆணையம் தன்னிச்சையாக அடுத்த 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் போதும் என உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
» உயிரை மாய்க்கும் சிந்தை வேண்டாம் - மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
» நீட் தேர்வால் மாணவர், அவரது தந்தை அடுத்தடுத்து தற்கொலை - அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்
மேலும், தமிழகத்துக்கு கர்நாடகம் நடப்பாண்டில் கடந்த ஜூன் 1 முதல் இம்மாதம் ஆக.11 வரை 53.27 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இதுவரை கிடைத்துள்ளது. பற்றாக்குறையான 37.48 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என 2 குழுக்களும் சேர்ந்து தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 2 குழுக்களும் இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
வறட்சி காலங்களில் தண்ணீரை எவ்வாறு தமிழகமும், கர்நாடக மும் பங்கீட்டுக்கொள்ள வேண்டுமென்ற கொள்கையையும் வகுக்கவில்லை, என குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறி்த்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதி தீர்ப்பு விவரம், காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம், தமிழக அரசு தரப்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ள வாதங்கள் ஆகியவை தொகுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக மாநிலம் வெளிகொண்டலு நீர் தேக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதத்தில் திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago