சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம்இரவுமுதல் நேற்று அதிகாலைவரை இடி, மின்னலுடன் விடியவிடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதலே வானமே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் விட்டு,விட்டு கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ளசாலைகளில் நள்ளிரவில் மழைநீர் தேங்கியது.

நேற்று காலைநேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது.இருப்பினும் கிண்டிகத்திபாரா பாலத்தின் கீழ் உள்ள சாலைகளில் 2 அடி அளவுக்குமழைநீர் தேங்கியது. முதலில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீர்வெளியேற்றப்பட்டு மீண்டும்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

கொரட்டூரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மழைநீர் தேங்கி
குளம்போல் காட்சியளிக்கிறது. படம்: எஸ்.சத்தியசீலன்

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி சென்னைமாவட்டத்தில் அம்பத்தூர், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் தலா 11செமீ, மதுரவாயல், முகலிவாக்கம், வளசரவாக்கம், அடையார்சுற்றுச்சூழல் பூங்கா ஆகியஇடங்களில் தலா 10 செமீ, டிஜிபி அலுவலகம், சென்னைவிமான நிலையம், ராயபுரம்,திரு.வி.க.நகர், கொளத்தூர், நந்தனம் ஆகிய இடங்களில்தலா 9 செமீ, எம்ஜிஆர் நகர்,அண்ணா பல்கலைக்கழகம்,கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் தலா 8 செமீ, பெரம்பூர், அயனாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், சென்னை ஆட்சியர் அலுவலகம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செமீ, திரூரில் 12 செமீ, பூந்தமல்லியில் 10 செமீ, திருவள்ளூரில் 8 செமீ,ஆவடியில் 5 செமீ, திருத்தணி 4 செமீ மழை பதிவானது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 6 செமீ, மாமல்லபுரத்தில் 4 செமீ, திருப்போரூரில் 3 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கனமழை ஏன்? - சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் கனமழை மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததற்கான காரணம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை குறையும்போது, தென்னிந்திய பகுதிகளில் இடி மேகக்கூட்டங்கள் உருவாகி கனமழைபெய்யும். அதாவது, வட மாநிலங்களில் பருவமழை வலு குறைந்திருக்கும் நிலையில் மேற்கு திசைக் காற்றும், தென்மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது.

அதனால் வளிமண்டலத்தில் மேலடுக்கு பகுதிக்கும், கீழடுக்கு பகுதிக்குமான நிலைத் தன்மை குறைந்து, இடி மழை மேகக் கூட்டங்கள் உருவாகி, மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து கடல் பகுதியின் அருகேவலுப்பெற்றது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வரும் 3 நாட்களுக்கு இப்பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்