மழை காரணமாக தேநீர் விருந்து ஒத்திவைப்பு: ஆளுநர் மாளிகை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மழை காரணமாக நாளை (ஆக.15) நடைபெறவிருந்த தேநீர் விருந்தை ஒத்திவைப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, ராஜ் பவனின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், சுதந்திர தினமான நாளை (ஆக.15) மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக விருந்தினர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை கருத்தில் கொண்டு, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுகிறது. ஆளுநரின் தேநீர் விருந்து நடத்தப்படும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்