திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி ஊராட்சிக்குட்பட்ட விஜயமாம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மலு. இவர் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, நரசிம்மலுவின் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அதனை மயானத்தில் அடக்கம் செய்யாமல், விவசாய நிலத்தில் புதைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, நொச்சிலி ஊராட்சி பகுதியை சேர்ந்த பாபு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `உயிரிழந்தவரின் உடலை பட்டா நிலத்தில் புதைக்க அனுமதிக்க முடியாது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி, உயிரிழந்தவரின் உடலை மயானத்தில் மட்டுமே புதைக்க வேண்டும். ஆகவே விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட நரசிம்மலுவின் உடலை தோண்டி மயானத்தில் புதைக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, உயிரிழந்த நரசிம்மலுவின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று அதிகாலை திருத்தணி கோட்டாட்சியர் தீபா, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட உடல் 130 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago