சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிவு. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 13) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி மழை பதிவானது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்