சுதந்திர தின விழா நிகழ்ச்சி | சென்னையில் ஆக.15-ல் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தின விழா நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னையில் ஆக.15-ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர தினவிழா நிகழ்ச்சி 15.08.2023-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் -15 அன்று காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் நேரம் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கீழ்கண்ட வகைகளில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

1. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

2. காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

3. பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, EVR சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

4. அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், NFS சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE