மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கிருந்து திறக்கப்பட்ட நீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5,140 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 8-ம் தேதி இரவு 8 மணி முதல் விநாடிக்கு 7,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 55.54 அடியாகவும், நீர் இருப்பு 21.47 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்மட்டம் சரிவதால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago