நெல்லையில் முன்விரோதம் காரணமாக விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; பெட்டிக்கடைக்கு தீ வைப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதத்தில் விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பெட்டிக்கடைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.

நாங்குநேரியில் பிளஸ் டூ மாணவரையும், அவரது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மீண்டும் அப்பகுதி பதற்றத்துக்கு உள்ளானது. நாங்குநேரி அருகேயுள்ள தம்புபுரத்தை சேர்ந்த விவசாயி வானுமாமலை (60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்குமுன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வானுமாமலை கடந்த ஜூலை 30-ம் தேதி வந்து கொண்டிருந்தபோது வழிமறித்து அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின்பேரில் நாங்குநேரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வானுமாமலையின் ஓட்டுக்கூரை வீட்டின்மீது ஒரு கும்பல் இன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன், அருகிலிருந்த பெட்டிக்கடைக்கும் தீவைத்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்துக்கு வந்து நாங்குநேரி போலீஸார் வீசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கண்ணன் மகன் நவீன் உள்ளிட்ட 6 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

தலைமறைவாகியுள்ள அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். போலீஸாரால் தேடப்படும் நவீன் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நாங்குநேரி உதவி காவல் ஆய்வாளர் கணேசனை திருவிழாவின்போது அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கு, நாங்குநேரி தனிப்பிரிவு காவலர் சுந்தர் என்பவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் அவர் மீது உள்ளது. இந்த வழக்குகளில் கடந்த மாதம் ஜாமீனில் நவீன் வெளியே வந்திருந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு, பெட்டிக்கடை எரிப்பு சம்பவங்களை அடுத்து நாங்குநேரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்