மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆக.20-ல் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் ஆக.20-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு சட்டப்போராட்டங் களுக்கு பிறகு, அதிமுகவை பழனிசாமி கைப்பற்றி, அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட் டனர். பழனிசாமிக்கு எதிராகபன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வரு கிறார்.

டிடிவி தினகரனுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.கோடநாடு கொலை, கொள்ளைவழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதிமுக மாநாடு: இதற்கிடையில் மக்களவை தேர்தல் முன்னோட்டமாக தமிழகத்தில் அதிமுகவின் பலத்தை காட்ட, பழனிசாமி தலைமையில் ஆக.20-ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அறி வித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: இதில், ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் பதவிவழங்கப்பட்ட நிலையில், அதைரத்து செய்து, அந்த பதவியில் பழனிசாமி அமர்ந்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்திருப்பதாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாகவும், திருச்சி மாநாடு போல, சேலத்திலும் மாநாடு நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்