மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,385 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, அந்த அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் விநாடிக்கு 5,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,385 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 55.79 அடியாகவும், நீர்இருப்பு21.65 டிஎம்சியாகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago