பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண் பெற்ற போக்குவரத்துக் கழக பணியாளர்களின் குழந்தைகளுக்கு துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பரிசு வழங்கினார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணி யாளர்களின் குழந்தைகளில் பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில், 10-ம் வகுப்பு மற்றும்12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் 5 மாணவர்களுக்கு தலா ரூ.5,000 மற்றும் அடுத்த நிலையில் உள்ள 10 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

நிகழ்வில், துறைச் செயலர்க.பணீந்திர ரெட்டி, விரைவுப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், மாநகர போக்குவரத்துக் கழக பொறுப்பு மேலாண் இயக்குநர் க.குணசேகரன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளர் ஆனந்த் சம்பத் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்