உதகை: உதகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக கன மழை பெய்தது. மின் உற்பத்தி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால், அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக, உதகை மற்றும் குன்னூர் நகரங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யும் பார்சன்ஸ்வேலி, ரேலியா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
கடந்த ஒரு வாரமாக மழையின் தீவிரம் குறைந்து வெயிலான கால நிலை நிலவி வந்த நிலையில் ,உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் நேற்று கன மழை பெய்தது. உதகை நகரிலுள்ள சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், நகராட்சி மார்க்கெட்டை வெள்ளம் சூழ்ந்தது.
மழை காரணமாக, ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லங்களில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
மழை அளவு (மி.மீ.): நேற்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக பந்தலூரில் 47 மில்லி மீட்டர் மழை பதிவானது. உதகை - 39, கோத்தகிரி - 22, கெத்தை - 22, பாடந்தொரை - 12, அவலாஞ்சி - 12, கிண்ணக்கொரை - 11, செருமுள்ளி - 10, குன்னூர் - 9.5, தேவாலா - 8, நடுவட்டம் - 7, குந்தா -7, கேத்தி - 5, எமரால்டு - 4, பர்லியாறு - 4, கோடநாடு - 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago