சென்னை: சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் இந்த நிலையம் கட்டப்படுகிறது.
தற்போது, இந்த பேருந்து நிலையத்தின் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில், இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், நகரப் பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரி வந்ததனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்காக, தெற்கு ரயில்வேயுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. புதிய நிலையத்தை அமைக்க ரயில்வே பொதுமேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான செலவை முழுமையாக ஏற்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago