நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் குடும்ப வறுமை யால் இரு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சு கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா (46). இவர்களுக்கு சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலியா (16) என்ற 2 மகள்கள் இருந்தனர். சகாய திவ்யா பி.இ. இரண்டாம் ஆண்டும், சகாய பூஜா மவுலியா 11-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஏசுதாசன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதையடுத்து, மகள்களுடன் அனிட்டா வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அனிட்டா குழந்தைகளுடன் சாப்பிட்டார். பின்னர், 3 பேரும் தூங்க சென்றுள்ளனர். நேற்று காலையில் அவர்களது வீட்டு கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால், அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிட்டா மற்றும் 2 மகள்களும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.
கடிதம் சிக்கியது: இது குறித்து தகவலறிந்த அஞ்சு கிராமம் போலீஸார் அங்கு வந்து 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனிட்டா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
அதில், ‘தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் குடும்பத் தோடு தற்கொலை செய்வதாகவும், தங்களது மரணத்துக்கு வேறு யாரும் காரணமில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு மகள்களையும் தூக்கில் தொங்கவிட்ட பின்னர், அனிட்டா தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கணவர் இறந்த பிறகு அனிட்டாவுக்கு பணப்பிரச்சினை இருந்துள்ளது. எனவே, வறுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 3 பேர் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து அஞ்சுகிராமம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago