ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம் கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றம், விபத்து மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மூன்று புள்ளி திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் புள்ளி திமிங்கலங்கள் காணப்படுகின்றன. அழிந்துவரும் அரியவகை உயிரினமாக உள்ளதால் இவற்றை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து, நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு மாறி விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் புள்ளி திமிங்கலங்கள் கரையை நோக்கி வரத் தொடங்கிவிட்டன. இதனால் விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது மோதி, வலைகளில் அடிபட்டு இறந்து விடுகின்றன. மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத இந்த வகை திமிங்கலங்கள் கரைக்கு வந்தால் தகவல் அளிக்கும்படி பொதுமக்களிடம் வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago