சென்னை: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி இனிப்புப் பொங்கல் வழங்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி நூற்றாண்டு விழா: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் வழங்கவும், அதற்கான பொருட்கள் வாங்குவதற்கும் சமூக நலத்துறை கடந்த மே மாதம் அனுமதி அளித்தது.
இதற்கிடையே கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் அன்றைய தினம் தர முடியாமல் போனது.
இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய சமூக பாதுகாப்பு தினமான வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் அனைத்து சத்துணவு மையங்களிலும் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி (திங்கள்) இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago