திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தாக்கியதாக பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையில் உள்ள இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 3 மாணவர்களை அவர்களது பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீஸார் மாணவர்களிடம் விசாரித்தபோது, ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்து தோல்வி அடைந்ததால், தங்களை ஆசிரியர் தாக்கியதாகவும், தாக்கியதை செல்போனில் வீடியோ எடுத்ததற்காக மீண்டும் தனி அறையில் வைத்து ஆசிரியர் தாக்கியதில் கண், தொடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு பயங்கர வலி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறும்போது, இந்த மாணவர்கள் 3 பேரும் பள்ளி விதிகளை மீறி செல்போன் பயன்படுத்தியதாகவும், வீடியோக்கள் பதிவிட்டதாகவும், அதன் காரணத்தினாலேயே ஆசிரியர் அந்த மாணவர்களை கண்டித்ததாகவும் தெரிவித்துள் ளனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago