எரிவாயு சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலித்தது, உரிய சிலிண்டர்களை கையிருப்பு வைக்காதது போன்ற முறைகேடு களுக்காக பல்வேறு ஏஜென்ஸி களுக்கு பாரத் பெட்ரோலியம் நிர்வாகம் இந்த ஆண்டில் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுபோல முறைகேடுகள் நடந் தால் வாடிக்கையாளர்கள் புகார் கூறலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்றும் நாட்டின் பிரதான எண்ணெய் நிறுவனங்களாக உள்ளன. இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்காக, 4,725 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.
இதுதவிர, தமிழகம் முழுவதும் 1,200 பெட்ரோல் பங்க்குகளும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி அடங்கிய தென்மாநிலங்களில் 4 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளும் உள்ளன. இந்த நிலையில், வீடு களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஏஜென்ஸி களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் (விஜிலென்ஸ்) என்.வெங்கட்ரமணி கூறிய தாவது:
வாடிக்கையாளர்களுக்கு சரி யான அளவில் தரமான பெட்ரோல் வழங்க வேண்டும் என்ற நோக்கில், பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்க்குகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்கள் தானியங்கி வசதி கொண்டவையாக மாற்றப்பட்டு வருகின்றன. தென்இந்தியாவில் உள்ள 4 ஆயிரம் பங்க்குகளில் 60 சதவீத பங்க்குகளில் தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன்மூலம், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம், பெட்ரோலின் தரம் மற்றும் அளவு ஆகியவை எங்கள் நிறுவனத்தில் இருந்து தினமும் கண்காணிக்கப்படும். இதனால், பங்க்குகளில் முறை கேடு நடப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. அதேபோல, எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பல முறைகேடுகள் நடப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் நாங்கள் நடத்திய சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு சிலிண்டர்கள் விற்கப்பட்டிருப்பது, தேவை யான அளவு சிலிண்டர்களை கையிருப்பில் வைக்காமல் குறைத்து கணக்கு காட்டியது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதுபோன்ற முறைகேடு களுக்காக இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் இம்மாதம் வரை ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.4 லட்சம் அதிகம்.
அது மட்டுமின்றி, கலப்பட பெட்ரோல் விற்றதால் ஒரு பங்க்கும், பினாமி பெயரில் நடத்தப்பட்டதால் ஒரு பங்க்கும் மூடப் பட்டுள்ளன.
எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஏஜென்ஸிகள் ஈடுபட்டாலோ பொதுமக்கள் 1800 22 4344 என்ற இலவச எண்ணுக்கு புகார் அளிக்கலாம். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago