மழையை எதிர்கொண்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த போலீஸ் - மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்கிடையே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக கன மழை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. சேலையூர், பள்ளிக்கரணை, கிழக்குத் தாம்பரம், முடிச்சூர், படப்பை, குரோம்பேட்டை, பல்லாவரம், பொழிச்சலூர், மேற்கு தாம்பரம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், ராம்நகர், முகலிவாக்கம், போரூர், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. வட சென்னையும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
மழை மீட்புப் பணியில் சென்னை போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து செயல்பட்டனர். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக மழை பாதிப்புப் பகுதிகளை ஆய்வுசெய்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். இதற்கிடையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மழைக்கு முன்னதாகவே அதை எதிர்கொள்ள மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூடுதல் மற்றும் துணை ஆணையர் தரத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கடந்த வாரம் பெய்த மழை மீட்புப் பணியில் போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியார்கள் சிறப்பாக செயல்பட்டனர். தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வாட்ஸ்அப் குழுக்களை அமைத்தனர். இதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதி புகைப்படங்களை பகிர்ந்து உடனடியாக சம்பவ இடம் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இனி இந்த குழுக்கள் விரிவுபடுத்தப்படும்” என்றனர்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “மழை எப்போது பெய்தாலும் அதை எதிர்கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago