விழுப்புரம், கள்ளக்குறிச்சி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 5 ரூபாய் வசூல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 117, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் 4 இடங்களில் மட்டும் டாஸ்மாக் பார் நடத்தவும், 5 இடங்களில் தனியார் மதுபான பார்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 இடங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பார்கள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டன. இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். தற்போது மீண்டும் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதனை தடுக்கும் வகையில் ஸ்வைப்பிங் மெஷின்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத் தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் ராமுவிடம் கேட்டபோது, "அனைத்து டாஸ்மாக் கடைகளுக் கும் ஸ்வைப்பிங் மெஷின் வழங்கப் பட்டுள்ளன. தற்போது 27 கடைகளில் மட்டுமே இது பயன்பாட்டில் உள்ளன. மற்றவை இணையவசதி கிடைக்காமல் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளன. மற்ற கடைகளிலும் இதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்ப னையாளர்கள், சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, "இரு மாவட்டங்களில் எந்த கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷினை வெளிப்படையாக வைப்பது கிடையாது. அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் அவை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைக்கப்படுகிறது.

மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்கினால் கடும் நடவடிக்கை என அரசு அறிவித்துள்ளதால், தற்போது கூடுதலாக 5 ரூபாய் வாங்குகிறோம். இத்தொகை வழக்கம் போல், கடைகளின் நிர்வாக செலவுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE