வனத்துறையினர் விசாரணையின்போது விவசாயி உயிரிழப்பு - அஞ்செட்டி அருகே சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு, சாலை மறியல்

By செய்திப்பிரிவு

ஓசூர்: அஞ்செட்டி அருகே வனத்துறையினரின் விசாரணையின்போது, விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த விவசாயியின் உறவினர்கள் வனத்துறை சோதனைச் சாவடிக்கு தீ வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் கிராமத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அஞ்செட்டி வனத்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை வனத்துறையினர் நிறுத்தியபோது, அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து, அவர்களை வனத்துறையினர் இருசக்கர வாகனத்தில் துரத்தியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, 3 பேரும் தப்பி ஓடினர்.

இதில், ஒருவர் வனத்துறையினரின் பிடியில் சிக்கினார். அவர் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்(48) என தெரியவந்தது. இதனிடையே, வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கும், அஞ்செட்டி போலீஸாருக்கும் வனத்துறையினர் தகவல் அளித்தனர். அஞ்செட்டி போலீஸார் வெங்கடேஷின் உடலை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வெங்கடேஷ் உயிரிழப்புக்கு வனத்துறையினர் தான் காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் நாட்றாம்பாளையம் அருகே பூ மரத்துக்குழி வனத்துறை சோதனைச் சாவடிக்கு நேற்று தீ வைத்தனர். மேலும், ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்ட வெங்கடேஷின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பதாக கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ் குமார் தாகூர் உறுதி அளித்தார். இதையேற்று, இரவு 7 மணிக்கு வெங்கடேஷின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்ததோடு, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

உறவினர்களின் குற்றச்சாட்டு: வெங்கடேஷின் உறவினர்கள் கூறும்போது, மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தனது உறவினர்கள் உதவியுடன் மாடுகளைத் தேடியபோது, வனத்துறையினர் விலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் என நினைத்து, தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்றனர்.

வனத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அட்டபள்ளம் அருகே வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த 3 பேர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி, நெத்தி டார்ச் லைட் வைத்திருந்தனர்.

அவர்களைப் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் தப்பிவிட்டனர். வெங்கடேஷ் என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவருக்கு நெஞ்சுவலி வருவதாகக் கூறினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்