பாலியல் தொல்லை: விழுப்புரம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது பயிற்சி பெண் மருத்துவர்கள் புகார்

By என்.முருகவேல்

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியுடன் மருத்துவமனையும் இயங்கி வருகிறது.

இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள், படிப்பு முடிந்து ஓராண்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பயிற்சியின்போது அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ஒருவரால், பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாக பயிற்சியில் ஈடுபடும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக 32 மாணவிகள், மருத்துவக் கல்லூரி டீன் வனிதாமணி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். தவறான செயலில் ஈடுபடும் உதவிப் பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவக் கல்லூரி டீன் வனிதாமணியிடம் கேட்டபோது, “இதுதொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். மாணவிகள் கூறுவது எந்த அளவுக்கு உண்மைத்தன்மை கொண்டது என்பதை அவரிடம் விசாரிக்க வேண்டும்.

புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியரின் மனைவியும் இதே கல்லூரியில்தான் பணிபுரிகிறார். எனவே பேராசிரியர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சியின் பேரிலும் கூறியிருக்கலாம். அவரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்புவோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்