சென்னை: அதிமுக சார்பில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு' என்ற பெயரில் வரும் ஆக.20-ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக விவாதிக்க, பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மாநாட்டுக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநாட்டு முகப்பு மற்றும் மேடை வடிவமைப்பு இறுதி செய்வது, மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறும் அம்சங்கள், விழா மலரில்இடம்பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்வது, மாநாட்டுப் பகுதியில் பார்வையாளர்களுக்குச் செய்ய உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் கூறியதாவது: இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்த கருத்தின்படி மொத்தம் 15லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அதிமுகவை தொட்டால்...: செல்லூர் ராஜூவை பாஜகவினர் விமர்சித்துள்ளனர். அதிமுகவைத் தொட்டால் கெட்டார் என்றுஅண்ணாமலைக்கு தெரியும். செல்லூர் ராஜுவாக இருந்தாலும், அதிமுக அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும், அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். அந்த நிலைமையை அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என நம்புகிறேன். நம்பிக்கையைக் காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவில் அன்வர்ராஜா: இதற்கிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜா நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நான் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் ஏதும் இல்லை. அதனால் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறேன்’’ என்றார்.
ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, ‘‘பாஜக சின்னத்துக்காக வாக்கு சேகரிப்பேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago