மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 60.11 அடியாக சரிந்தது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 131 அடியாக குறைந்தது. மேலும், அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப் படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட் டம் வேகமாக சரிந்து வருகிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 60.11 அடியாகவும், நீர் இருப்பு 24.76 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில் அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால், அன்று காலை 10 மணியளவிலேயே விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.
இந்நிலையில், நேற்று காலை11 மணிக்கு விநாடிக்கு 6 ஆயிரம்கனஅடி நீர்வரத்து இருந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த 3 நாட்களாக சற்றே அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago