சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் பயணச்சீட்டுகளை பேடிஎம் (Paytm) செயலி மூலம் பெறுவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னையில் நேற்று இதை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெட்ரோ பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வாட்ஸ்-அப் மூலம் க்யூஆர் (QR) குறியீடு பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது பேடிஎம் (Paytm App) செயலி மூலம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டைப் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த சேவைகள் தற்போதுள்ள 20 சதவீத கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.
இதன்மூலம், மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் பேடிஎம் செயலியில் புறப்படும் மற்றும் சேரும் நிலையத்தைக் குறிப்பிட்டு க்யூஆர் பயணச்சீட்டை வாங்க முடியும்.
இவ்வாறு சித்திக் கூறினார்.
» கல்லூரியில் தொடங்கி பங்கு சந்தையில் நுழைந்த நாட்டின் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம்
» தங்கும் அறைக்கான டெபாசிட் திரும்ப கிடைப்பதில்லை: திருப்பதியில் பக்தர்கள் புகார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago