கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் | நாளை முதல் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு: முதல்வர் இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நாளை தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பம் விநியோகம், பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் 3 நாட்கள் விண்ணப்பங்கள் நியாயவிலைக்கடை ஊழியர் கள் மூலம் வீடுவீடாக விநியோகிக் கப்பட்டது.

இதனை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, ஜூலை 27-ம் தேதிசிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி இன்றுடன் முடிகிறது. நேற்றைய நிலவரப்படி 79.66 லட்சம் பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நாளை (ஆக. 5) தொடங்கி, 16-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்கானவிண்ணப்ப விநியோகம் ஆக. 1-ம்தேதி முதல்தொடங்கியது.

குறிப்பாக 14,825 நியாயவிலைக்கடைகளில் உள்ள குடும்பஅட்டைகளுக்கு இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்தும் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, அதன்பிறகு தகுதிகள் அடிப் படையில் விண்ணப்பம் பரிசீலிக் கப்படுகிறது. தமிழக அரசிடம் உள்ள ஆதார், வருமான வரித்துறை, மின்கட்டண தரவுகள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம் மற்றும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து அமைச்சர்கள். அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுவரை 79 லட்சத்துக்கும் மேற்பட்டபயனாளிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்