போரூர், ஆலந்தூர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.179 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஆலந்தூர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடிமதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று ஆய்வு செய்தார். 2.29 கிமீ நீளம் கொண்ட இப்பணியில் 1.78 கிமீ தொலைவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

பழவந்தாங்கல் காவல் நிலையம்: கடந்த ஆண்டு ஏப்.12-ம் தேதி பழவந்தாங்கல் காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த காவல் நிலையத்துக்கு திடீரென முதல்வர் நேரில் சென்றார். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மவுலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் வழியாக சென்று முகலிவாக்கத்தில் உள்ள ராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது.

ரூ.100 கோடியில் வெள்ள தடுப்பு: தற்பொழுது உபரி நீர் செல்லும் நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும், ஏரியின்உபரி நீர் வெளியேற வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் கிராமங்களில் நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க முதல்வர் அறிவுறுத்தியதன்பேரில் ரூ.100 கோடியில் போரூர் ஏரி பகுதியில்வெள்ளப் பாதிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் புதிய ​மதகு​ அமைத்தல் மற்றும் ​போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளைமுதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அசோக் நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு பருவமழையின் காரணமாக 2 அடி உயரத்துக்கு 10 நாட்களாக மழைநீர் தேங்கியது. இதனால் மேற்கு மாம்பலம் பகுதியும் அதிகம் பாதிக்கப்பட்டது.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, ஜாபர்கான்பேட்டை கால்வாய் வழியாக அடையாறு ஆற்றை குறைந்த தொலைவில் சென்றடையும்படி மாற்றியமைக்கப்பட்டு தொழில்நுட்ப ஆலோசகரின் வடிவமைப்பின்படி 1.313 கி.மீ நீளத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.7.60 கோடி மதிப்பில் அசோக்நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்