சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முகக்கவசத்துக்குப் பதிலாக `டீ கப்' பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவமனையை நாடும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரும் உத்தரவாதம் இதுதானா?.
உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கில் ஏழை மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். தினசரி சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் வைத்துக்கொள்ள வேண்டியது அரசு மருத்துவமனையின் கடமை. இப்படிமனித உயிர்களுடன் விளையாடக் கூடாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசும், சுகாதாரத் துறையும் ஆரம்பச் சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசுமருத்துவமனை வரைஅனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் தடையின்றி வழங்கி, முன்னரே இருப்பு வைக்க வேண்டும்.
ஏழை மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago