பரமத்தி வேலூர் | அமைச்சர் செந்தில்பாலாஜி உறவினர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: பரமத்தி வேலூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரின் உறவினர் வீட்டில் அமலாகத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளராக வீரா.சாமிநாதன் என்பவர் உள்ளார். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இச்சூழலில் வியாழக்கிழமை மாலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் உள்ள டயர் மணி (எ) காளியப்பன் என்பவர் வீட்டில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதுபோல் பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அவருக்கு சொந்தமான அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆய்வு 7 மணியைக் கடந்தும் நடைபெற்றது. இவர் வேடசந்தூர் வீரா.சாமிநாதன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கரூர் - கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். | வாசிக்க > கரூர் | அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE