செல்வராகவன் தவறவிட்ட மணி பர்ஸ் 15 நிமிடத்தில் மீட்பு: மதுரை விமான நிலைய ஊழியர்களுக்கு பாராட்டு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது, ஏர் இந்தியா விமானத்தில் தொலைந்த பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு திரைப்பட இயக்குநர் செல்வராகவன் நன்றி தெரிவித்தார்.

தனது சொந்த வேலை நிமிர்த்தமாக திரைப்பட இயக்குநர் செல்வராவன் மதுரைக்கு வந்து இருந்தார். இதன் பின், அவர் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார். இந்த நிலையில், விமானத்தில் தனது பணப்பையை அவர் தவறவிட்டார். பையை அவர் தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சுமார் 15 நிமிடத்தில் ஏர் - இந்தியா நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தொலைந்த பணப்பை தங்களிடம் உள்ளது. நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். பணப்பையை பெற்றுக்கொண்ட செல்வராகவன், ஏர் - இந்தியா நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்திலும் அது பற்றி பதவிட்டு இருந்தார். இதற்கு விமான நிலைய நிர்வாகமும் பதிலளித்தது. அதில், ‘எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என பதிவிட்டு இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்