சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வட சென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்துக்கு ரூ. 3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில். இதுவரை 483.83 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

தென்சென்னை பகுதியின் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு KfW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியில் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் M1, M2 மற்றும் M3 மூன்று கூறுகளாக மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. இரண்டு கட்டங்களாக, எம்1 தொகுப்புத் திட்டத்தில் 160.83 கி.மீ. நீளத்துக்கு ரூ.597.48 கோடி மதிப்பீட்டில் 12 சிப்பங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன .இதுவரை 21.82 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

2023-ம் ஆண்டின் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வரும் பணி மற்றும் சிறு பழுதுபார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்