செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை மட்டுமல்ல; உரிமையும்கூட: உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் காரசார வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியைகாவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட என மத்திய அரசின் சொலிசிட்டர்ஜெனரல் காரசாரமாக வாதிட்டார்.அதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். இதே விவகாரம் தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி, வரும் ஆக.8 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தனது கணவரை சட்டவிரோதக் காவலில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமூன்றாவது நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்றும், அவர் பரிபூரணமாக குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை தனது காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் கடந்த ஜூலை 14 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘செந்தில் பாலாஜி இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளை விசாரணை நடத்த விடாமல் இடையூறுஏற்படுத்தினார். நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரை சுதந்திரமாக காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தை நீதிமன்ற காவலின் முதல் 15 நாட்களாக கருதக்கூடாது.

செந்தில் பாலாஜிதான் இந்தவழக்கின் முக்கியமான நபர் என்பதால் அவரை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத்துறையின் கடமை மட்டுமின்றி உரிமையும் கூட. இதைசட்ட ரீதியாக யாரும் மறுக்க முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை காவலில் எடுத்துவிசாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்கெனவே மற்றொரு வழக்கி்ல் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எனவே தற்போதுஅவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் கொடுத்தவர்களே, சமாதானமாக செல்கிறோம் எனக்கூறியதை எதிர்த்தும்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல், பொதுமக்களின் பணம் கையாடல் எனபல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடைய வாக்குமூலம் பெற முயற்சித்தோம். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அவரை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தில் அவர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு வலுவான காரணங்கள் இருந்தன என்பதால் தான் சட்ட ரீதியாக அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். இரு சாட்சிகள் முன்னிலையில் அவரை கைது செய்திருப்பதை அவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

மருத்துவ சிகிச்சை ஒருபக்கம், நீதிமன்ற காவல் மறுபக்கம் என்றஇக்கட்டான சூழலில் காவலில் எடுத்து விசாரி்க்க விசாரணை நீதிமன்றம் அனுமதியளித்தும், எங்களால் அவரை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை. அதேபோல சிறையில் வைத்தும் விசாரிக்க முடியாது.

உதாரணத்துக்கு நாங்கள் கைதுசெய்துள்ள நபர் எங்களிடமிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டு, 15நாட்கள் கழித்து சரணடைகிறார் என்றால் நீங்கள் இனி காவலில்எடுத்து விசாரிக்க முடியாது எனக்கூற முடியுமா? அதுபோலத்தான் இதுவும். நீதிமன்ற காவலில் உள்ளநபரை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ள நாட்களை அமலாக்கத் துறைக்கான விசாரணை காலமாக கருதினால் செந்தில் பாலாஜி சட்டத்தை உடைக்க நாமே காரணமாகி விடுவோம், என காரசாரமாக வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடா மல் தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்