நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளருக்கு சிறை

By செய்திப்பிரிவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் 2 பேருக்கு தலா 2 வார சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம், பணப் பலன்கள் கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு 2019-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோரி 2020-ல் ஞானபிரகாசம் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித் துறைச் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத் துறை உயர் செயலர்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அடுத்த விசாரணையின் போது பிரதீப் யாதவ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆஜராகினர்.அப்போது, நீதிபதி, மனுதாரர் வழக்கில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு பலமுறை வாய்ப்பளித்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? ஒரு வழக்கில் தீவிர ஆலோசனை செய்த பின்னர்தான் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.

அந்த உத்தரவுகளை தொடர்புடைய துறை அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவது இல்லை. நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க இயலாது என அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கல்வித் துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

2 வாரம் சிறை விதிப்பு: இதற்குக் காரணமான அப்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் தலா 2 வாரம் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத்தைச் செலுத்தாவிட்டால் கூடுதலாக 3 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் வரும் 9-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் முன் சரண் அடைய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்