கிருஷ்ணகிரி அருகே செல்போன் சிக்னல் இல்லாத சிக்கபூவத்தி ஊராட்சியில், கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸை அழைக்க 2 கிமீ வந்து தொடர்பு கொள்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது சிக்கபூவத்தி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பூவத்தி, சிக்க பூவத்தி, குருதட்டனூர், தென்னைமாரன்கொட்டாய், முங்கில்பாடி, தண்டானூர், கெட்டூர், பன்னைகொல்லபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் டவர்கள் ஏதும் நிறுவப்படாததால், இங்கு செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் வெளியூர்களில் பணிக்கு செல்லும் போதும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் போதும் செல்போனுக்கான தேவை இருப்பதால், அனைவரது வீடுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் உள்ளன. இங்குள்ள இளைஞர்களில் 60 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பூவத்தி கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டும் எந்த தனியார் செல்போன் நிறு வனமும் டவர் அமைக்க முன்வரவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் கூறியதாவது:
எங்கள் ஊராட்சியில் செல்போன்கள் இல்லாத வீடுகள் இல்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் என்றால், 1 கிமீ தூரத்தில் உள்ள உப்புக்குட்டை கிராமத்திற்கும், 4 கிமீ தூரமுள்ள மிட்டப்பள்ளி கிராமத்திற்கும் சென்று அங்கிருந்து தகவல் அளிக்கிறோம்.
அரசு அலுவலர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு என எவ்வித தகவல்களையும் உடனடியாக பகிர முடியவில்லை. தனித் தீவு போல் எங்கள் கிராமங்கள் உள்ளன. செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். பிஎஸ்என்எல் மூலம் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பாடங்கள் தொடர்பாக இணையவசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே கிராம மக்களின் நலன்கருதி உடனடியாக பிஎஸ்என்எல் அல்லது தனியார் செல்போன் நிறுவனங்கள், பூவத்தி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழரசன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago