சென்னை: கிருஷ்ணகிரி வெடிவிபத்து விவகாரத்தை என்.ஐ.ஏ அல்லது சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அதிமுக எம்பி மு.தம்பிதுரை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் அறிவீர்கள். இந்த சம்பவம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால், அங்கிருந்த உரிமம் பெற்ற பட்டாசுக் கடை மற்றும் கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மக்கள் அடர்த்தி மிகுந்ததும், அதிகளவிலான மாணவர்கள் படிக்கும் பள்ளி அருகில் இ்ந்த கிடங்கு அமைந்துள்ளது. எனவே, 9 பேர் உயிரிழந்த இந்த கிடங்கில் அபாயகரமான வெடி பொருட்கள் ஏதேனும் இருந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். மாநில அரசு தவறான தகவல்களை அளிப்பதால், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
மிக முக்கியமான விஷயத்தில் மாநில அரசு மிகவும் அஜாக்கிரதையாக நடந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது நான் குரலெழுப்பினேன்.அப்போது மத்திய அரசு இதில் உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும் என்றும் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வே்ண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.
எனவே, உரிமம் பெறாத இந்த கிடங்கில் நடைபெற்றுள்ள வெடி விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக தேசிய புலனாய்வு பிரிவு அல்லது சிபிஐக்கு உத்தரவிட்டு, தற்போதைய மாநில அரசு தெரிவித்துள்ள தவறான தகவல் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago