பெரம்பலூர்: பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் ஜூலை 29-ல் பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.
இந்நிலையில், அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதேபோல, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதும் நீதிபதி கவிதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுக்க முகாந்திரம் இல்லை" எனக் கூறி காவல் துறையின் மனுவை நீதிபதி கவிதா தள்ளுபடி செய்தார். மேலும், நிபந்தனை ஜாமீனில் அவரை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago