கிருஷ்ணகிரி அணையின் முதல் மதகு உடைந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் (கேஆர்பி) கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அணை கடந்த 1952-ம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1955-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ரூ.1 கோடியே 84 லட்சத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த அணை 52 அடி ஆழத்தில் 3290 சதுர பரப்பளவு நீளம் கொண்டது. பணிகள் முடிந்து 1957-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் விடப்பட்டது. அணையில் மொத்தம் 8 பிரதான மதகுகளும் 2 சிறிய மதகுகளும் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடிக்கு தண்ணீர் 100 நாட்களுக்கு மேலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாயிலும், ஆற்றிலும் 316 கனஅடி தண்ணீர் நேற்று காலை திறந்துவிடப்பட்டுள்ளது. 4 மதகின் வழியாக சிறிதளவும் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன.
இந்நிலையில், மாலை 4.40 மணியளவில் அணையில் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டது. அணை ஷட்டர் உடைந்து ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் கதிரவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு மதகினைச் சீரமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அணையின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதகு உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் சில தினங்களுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago