கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து நீதி விசாரணை: சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி நியமனம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்திட, சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன் படி) சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக, குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நியமித்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டுள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள், சம்பவ நடந்த இடத்தில் விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், கடைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்து, அதனை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தில் இன்று (31ம் தேதி) பொக்லைன் உதவியுடன் அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்