வாணியம்பாடி / ஆம்பூர்: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் பெண்கள் படித்திருக்கவே முடியாது என விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகரில் உள்ள நகராட்சி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 590 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப் பினர்கள் தேவராஜி (ஜோலார் பேட்டை), வில்வநாதன் (ஆம்பூர்), வாணியம்பாடி நகராட்சி மன்றத் தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசும்போது, ‘‘பெண்கள் படித்தால் தான் குடும்ப பொருளாதாரம் முன்னேறும். பெண்கள் படித் தால் தான் குடும்பப்பாங்காக நடத்துவார்கள். பெண்களுக்கு தான் பொறுப்பு அதிகம் என சொன்னவர்கள் மும்மூர்த்திகள். அவர்களில், முதலானவர் தந்தை பெரியார்.
இரண்டாவது பேரறிஞர் அண்ணா, மூன்றாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழ்நாட்டில் பெண்கள் படித்திருக்கவே முடியாது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 80 பள்ளிகளில் 5,443 மாணவர்கள், 5,811 மாணவிகள் என மொத்தம் 11,254 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், முதற்கட்டமாக தற்போது வாணியம்பாடி நகராட்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 590 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப் பட்டுள்ளன’’ என்றார். தொடர்ந்து, அந்த பள்ளி வளாகத்தில் நடை பெற்ற மகளிர் உரிமை தொகை பெறும் திட்ட விண்ணப்ப பதிவேற் றம் செய்யும் முகாமை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங் குப்பம் பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மற்றும் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஒவ்வொரு அமைச்சரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப் பித்துள்ளார். அதற்காக, ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறேன்.
கிராமப்புற பகுதியில் சில விஷயங்கள் பேசுவார்கள். அனை வருக்கும் இது கிடைத்ததா? என்று. ஆனால், வசதி படைத்தவர்கள் யாருக்கும் இது கிடைக்காது. உதாரணத்துக்கு, அமைச்சராக உள்ள நான், மாவட்ட ஆட்சியராக உள்ள பாஸ்கர பாண்டியன், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள வில்வநாதன்,
மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவராக உள்ள சுரேஷ்குமார் ஆகியோரின் மனைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டால் இது நியாயமா? அதனால் தான் வசதி படைத்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த உரிமை தொகை கிடைக்காது. இதில், விடுபட்டாலும் வாணியம் பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தால் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago